Live Free Sun TV Online

வெள்ளி, 23 டிசம்பர், 2011

நாசரேத் டூ ஏரல் ரோட்டில் சேதமாகிய பாலத்தை உடனே சீர் செய்ய வேண்டும்

தூத்துக்குடி :நாசரேத் டூ ஏரல் ரோட்டில் சேர்மன் கோயில் அருகே உள்ள பாலம் சேதமாகியிருப்பதால் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இதனை சீர்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் இருந்து ஏரல் செல்லும் நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் சேர்மன் கோயில் அருகே சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் சமீபத்தில் பெய்த மழையினால் சேதமடைந்தது. தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தின் வழியாக அதிகமான வாகனங்கள் சென்று வருகிறது.
அதிக பஸ் போக்குவரத்தும் இருப்பதால் பிசியான ரோடாக இந்த ரோடு இருந்து வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரோட்டில் சமீபத்தில் பெய்த மழையினால் பாலத்தின் சைடு சுவர் சேதமாகியும், பாலத்தின் மேல்தளத்தின் ஒரு பகுதி மோசமாகி இருக்கிறது.
இதனால் பஸ் போக்குவரத்திற்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பஸ் போக்குவரத்தை தடங்கல் இல்லாமல் மேற்கொள்வதற்காக பாலத்தின் மற்றொரு பகுதி வழியாக சிரமப்பட்டு பஸ் போக்குவரத்தை தடங்கல் இல்லாமல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அதிக வாகன போக்குவரத்து இருபப்தால் இதே நிலை தொடர்ந்தால் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து வெள்ள நிவாரணத்திற்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ள நிதியில் இந்த பணியை செய்வதற்கு முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும் என்று ஏரல் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட கலெக்டர் இதில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏரல் பாலம் மூழ்கியது. இதனால் இரண்டு நாள் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து இன்று காலை மீண்டும் தொடங்கியது.

ஏரல் பாலத்தில் 2 நாளுக்குப்பின் போக்குவரத்து தொடங்கியது
ஏரல், நவ.29&
தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏரல் ஆற்றுப்பாலம் கடந்த 27ஆம் தேதி மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் பாலத்தில் உள்ள தூண்களை சுற்றி அமலைச்செடிகள் மலைபோல் குவிந்து கிடந்தது. இது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் நேற்று வெள்ளத்தையும் பொருட்படுத்தாது பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பாலத்தில் இறங்கி அமலைச்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். பேரூராட்சி தலைவரை கலெக்டர் பாராட்டியதோடு அங்குள்ள அமலைச்செடிகளை அகற்றும்படி பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 40 பேர் வரைவழைக்கப்பட்டு அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அது முடியாதநிலை ஏற்பட்டதால் ஜேசிபி வரவழைக்கப்பட்டது. அதுமூலம் அகற்றும்பணி தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. மேலும் பாலத்தின் மீது ஓடிய வெள்ளம் நேற்றிரவு வடிந்ததல், 2 நாட்களுக்குப் பின் இன்று காலை போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இதற்கிடையில் பாலத்தின் ஆரம்ப பகுதியில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. அதன்மீது முள்செடியை வெட்டிபோட்டு தற்காலிகமாக அடைத்துள்ளனர். வாகனங்கள் தட்டுத்தடுமாறித்தான் செல்கின்றன. மீண்டும் வெள்ளம் வந்தால் பாலம் இடிந்துவிடும் ஆபத்து உள்ளது.

ஞாயிறு, 27 நவம்பர், 2011


தமிழ்நாடு போக்குவரத்து அலுவலகங்களின் வாகனப் பதிவு எண்கள்

போக்குவரத்து பதிவெண்கள் - தமிழ்நாடு

1. சென்னை - சைதாப்பேட்டை
TN-01
2. சென்னை - அண்ணாநகர்
TN-02
3. சென்னை - புளியந்தோப்பு
TN-04
4. சென்னை - வியாசர்பாடி
TN-05
5. சென்னை - கொட்டிவாக்கம்
TN-07
6. சென்னை - அசோக்நகர்
TN-09
7. சென்னை - வளசரவாக்கம்
TN-10
8. திருவள்ளூர்
TN-20
9. காஞ்சிபுரம்
TN-21
10. மீனம்பாக்கம்
TN-22
11. வேலூர்
TN-23
12. திருவண்ணாமலை
TN-25
13. சேலம்
TN-27
14. நாமக்கல்
TN-28
15. தர்மபுரி
TN-29
16. மேட்டூர்
TN-30
17. கடலூர்
TN-31
18. விழுப்புரம்
TN-32
19. ஈரோடு
TN-33
20. திருச்செங்கோடு
TN-34
21. கோயம்புத்தூர்
TN-37
22. கோயம்புத்தூர்
TN-38
23. திருப்பூர்
TN-39
24. மேட்டுப்பாளையம்
TN-40
25. பொள்ளாச்சி
TN-41
26. நீலகிரி
TN-43
27. திருச்சி
TN-45
28. பெரம்பலூர்
TN-46
29. கரூர்
TN-47
30. ஸ்ரீரங்கம்
TN-48
31. தஞ்சாவூர்
TN-49
32. திருவாரூர்
TN-50
33. நாகப்பட்டினம்
TN-51
34. புதுக்கோட்டை
TN-55
35. திண்டுக்கல்
TN-57
36. மதுரை
TN-58
37. மதுரை
TN-59
38. பெரியகுளம்
TN-60
39. சிவகங்கை
TN-63
40. இராமநாதபுரம்
 TN-65
41. விருதுநகர்
TN-67
42. தூத்துக்குடி
TN-69