Live Free Sun TV Online

வெள்ளி, 21 அக்டோபர், 2011

ஏரல் பேரூராட்சியில் திமுக வெற்றி

ஏரல் பேரூராட்சியில் திமுக வெற்றி
ஏரல், அக்.22:
ஏரல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
ஏரல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட பாலகிருஷ்ணன் 1843 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மற்ற வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் வருமாறு:
ஜெயசிவசுப்பிரமணியன் (அதிமுக)&1567, தேவராஜ் (சுயே)&814, பாக்கர்அலி (காங்.)&374, மூர்த்தி (தேமுதிக)&104.
வார்டு வாரியாக வெற்றி பெற்றவர்கள் விபரம் வருமாறு: 1வது வார்டு: சேகுஜமான் (திமுக)&135 வாக்குகள், 2வது வார்டு: தனலெட்சுமி (சுயே) போட்டியின்றி தேர்வு, 3வது வார்டு அசோக்குமார் (அதிமுக) 196 வாக்குகள், 4வது வார்டு சாமிநாதன் (பிஜேபி) 79 வாக்குகள், 5வது வார்டு முத்துராஜ் (திமுக) 153 வாக்குகள், 6வது வார்டு சிவக்குமார் (அதிமுக) 141 வாக்குகள், 7வது வார்டு கீதா (அதிமுக) 102 வாக்குகள், 8வது வார்டு டல்சி (திமுக) 154 வாக்குகள், 9வது வார்டு நவநீதகிருஷ்ணன் (திமுக) 142 வாக்குகள், 10வது வார்டு ரசுல்பீவி (சுயே) 195 வாக்குகள், 11வது வார்டு ராமர் (சுயே) 248 வாக்குகள், 12வது வார்டு மணிவண்ணன் (திமுக) 208 வாக்குகள், 13வது வார்டு ஜோசப்லாரன்ஸ் (அதிமுக) 141 வாக்குகள், 14வது வார்டு பிச்சையா (அதிமுக) 161 வாக்குகளும், 15வது வார்டு பேபிமகேஷ் (திமுக) 176 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றுள்ளனர்.
ஏரல் தேர்வுநிலை பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்ற பாலகிருஷ்ணன் (திமுக) தேர்தல் அதிகாரியிடம் சான்றிதழ் பெற்றார்.

8 இடங்களை திமுக கைப்பற்றியது.

தூத்துக்குடி, அக். 22:
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 டவுன் பஞ்சாயத்துகளில் 8 இடங்களை திமுக கைப்பற்றியது. அதிமுக 7 இடங்களி லும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 19 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த டவுன� பஞ்சாயத்துகளில் தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த 17, 19ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 8 டவுன் பஞ். தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்திலும் வெற்றி பெற்ற தலைவர்கள், கட்சிகளின் விவரம் வருமாறு:
தூத்துக்குடியில் 8 டவுன் பஞ்சாயத்துகளில் திமுக வெற்றி
அதிமுக&7, சுயேட்சைகள்&3
தூத்துக்குடி, அக். 22:
தூத்துக்குடி மாவட்டத்தில் 19 டவுன் பஞ்சாயத்துகளில் 8 இடங்களை திமுக கைப்பற்றியது. அதிமுக 7 இடங்களி லும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 19 டவுன் பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த டவுன� பஞ்சாயத்துகளில் தலைவர், கவுன்சிலர் பதவிகளுக்கு கடந்த 17, 19ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 8 டவுன் பஞ். தலைவர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு டவுன் பஞ்சாயத்திலும் வெற்றி பெற்ற தலைவர்கள், கட்சிகளின் விவரம் வருமாறு:
திமுக (8 இடங்கள்): ஆறுமுகநேரி & கல்யாணசுந்தரம், ஏரல் & பாலகிருஷ்ணன், கழுகுமலை & சுப்பிரமணியன், கானம் & செந்தமிழ் சேகர், கயத் தாறு & சுடலைமணி, நாசரேத் & ரவி செல்வகுமார், தென்திருப்பேரை & ராமஜெயம், சாத்தான்குளம் & ஜோசப்.
அதிமுக ( 7 இடங்கள்): ஆழ்வார்திருநகரி & ஆதிநாதன், பெருங்குளம் & சுந்தரராஜன், ஸ்ரீவைகுண் டம் & அருணாசலம், திருச்செந்தூர் & சுரேஷ்பாபு, உடன்குடி & ஆயிஷா உம்மாள், புதூர் & பெரியபூ, விளாத்திகுளம் & ஓவம்மாள்.
சுயேட்சைகள் (3 இடங்கள்): ஆத்தூர் & முருகானந்தம், எட்டயபுரம் & கோவிந்தராஜ பெருமாள், கடம்பூர் & மாரியப்பன்.
காங். (1 இடம்): சாயர்புரம்&எடிசி தினகரன்.

ஏரல்-நாசரேத் ரோட்டில் ஆக்ரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஏரல் : ஏரல்-நாசரேத் ரோட்டில் ஆக்ரமிப்புகளை அகற்றி இரண்டு வழி சாலையாக மாற்ற வேண்டும் என்று முதல் அமைச்சருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து பயணியர் நலச்சங்க தலைவர் சாந்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறயிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் மிக அதிக ஆக்ரமிப்புகள் காணப்படும் ரோடு ஏரல்-நாசரேத் ரோடாகும். இந்த வழியில் இரண்டு புகழ்பெற்ற வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கில் வாகனங்களும் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ரோட்டில் பல இடங்களில் இரண்டு பஸ்கள் விலகி செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. விசேஷ காலங்களில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறையினர் இதை கண்டு கொள்வது இல்லை.

குறிப்பாக இந்த ரோட்டில் கச்சினாவிளை-மூக்குப்பீறி, பிரகாசபுரம் பகுதிகளில் ஒரு பஸ் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த ரோட்டில் ஆக்ரமிப்புகளை அதற்றினால் தான் சீரான போக்குவரத்திற்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஏரல்-நாசரேத் ரோட்டில் 1947க்கு முன் உள்ள பிளான்படி வெளி மாவட்ட சர்வேயரை கொண்டு அளந்து ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். வருவாய் துறையினர் இந்த ரோட்டில் ஆக்ரமிப்புகள் இல்லை என்று கூறுகின்றனர். ஆனால் எந்த அளவிற்கு ஆக்ரமிப்பு செய்ய முடியுமோ அந்த அளவிற்கு ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும். மாவட்ட நிர்வாகமும் இந்த ஆக்ரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஏரல்-நாசரேத் ரோட்டில் ஆக்ரமிப்புகளை அகற்றி இரண்டு வழிசாலையாக மாற்றம் செய்ய உத்தரவு இட வேண்டும் இவ்வாறு சாந்தகுமார் தனது மனுவில் கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சி

தூத்துக்குடி மாவட்ட பேரூராட்சி
6 இடங்களில் அதிமுக; 5 இடங்களில் திமுக வெற்றி
ஏரல், அக். 21&
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சி தலைவர் இடங்களில் 14 பேரூராட்சிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் 6 இடங்களில் அதிமுகவும், 5 இடங்களில் திமுகவும், 2 இடங்களில் சுயேச்சைகளும், ஒரு இடத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளன.
வெற்றி பெற்றவர்கள் விவரம்:
பெருங்குளம் பேரூராட்சி (அதிமுக வெற்றி)
சுந்தரராஜன் (அதிமுக): 2075
சிவக்குமார் (திமுக): 1076
ஜெபமாலை (காங்): 119
சாயர்புரம் பேரூராட்சி (காங்., வெற்றி)
எடிசி தினகரன் (காங்.,): 1375
குணராஜ் என்ற குணம் (அதிமுக): 1359
ராஜேந்திரன் (தேமுதிக): 1254
ரோச் (திமுக) 925
ஏரல் பேரூராட்சி ( திமுக வெற்றி)
பாலகிருஷ்ணன் (திமுக): 1843
ஜெயசிவ சுப்பிரமணியன் (அதிமுக): 1567
தேவராஜன் (சுயே): 814
பார்க்கர்அலி (காங்): 374
மூர்த்தி (தேமுதிக): 104
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி (அதிமுக வெற்றி)
ஏ.பி. அருணாசலம் (அதிமுக): 3848
த. பெருமாள் (திமுக) 1890
திருச்செந்தூர் பேரூராட்சி (அதிமுக வெற்றி)
சுரேஷ்பாபு (அதிமுக): 6757
சுரேஷ் (திமுக) : 5664
ஆறுமுகநேரி பேரூராட்சி (திமுக வெற்றி)
கல்யாணசுந்தரம் (திமுக): 5741
கனகராஜ் (அதிமுக): 5091
ஆத்தூர் பேரூராட்சி (சுயே வெற்றி)
முருகானந்தம் (சுயே): 2330
அறிவுடைநம்பி (அதிமுக): 1647
கானம் பேரூராட்சி (திமுக வெற்றி)
செந்தமிழ்சேகர் (திமுக): 562
ராமஜெயம் (சுயே): 311
மாதவசிங் (அதிமுக): 278
நாசரேத் பேரூராட்சி (திமுக வெற்றி)
ரவிசெல்வக்குமார் (திமுக); 1896
ரவி இன்பராஜ் (அதிமுக); 1753
உடன்குடி பேரூராட்சி (அதிமுக வெற்றி)
ஆயிஷா கல்லாசி (அதிமுக): 3312
சாகுல்ஹமீது (காங்.,): 2570
கனகலிங்கம் (திமுக): 1773
சாத்தான்குளம் பேரூராட்சி (திமுக வெற்றி)
ஜோசப் (திமுக): 3221
செல்லத்துரை (அதிமுக): 2623
எட்டயபுரம் பேரூராட்சி (சுயே வெற்றி)
கோவிந்தராஜ பெருமாள் (சுயே): 2344
இளங்கோ (அதிமுக): 2324
சங்கரநாராராயணன் (சுயே): 1831
மரகதவல்லி (மார்க்) 278
விளாத்திகுளம் பேரூராட்சி (அதிமுக வெற்றி)
ஓவம்மாள் (அதிமுக): 2357
முத்துலட்சுமி (திமுக): 1544
புதூர் பேரூராட்சி (அதிமுக வெற்றி)
பெரியபோஸ் (அதிமுக): 1400
சுப்புராஜ் (திமுக) 1164
ஒரே ஒரு இடத்தில் காங்., வெற்றி

செவ்வாய், 18 அக்டோபர், 2011

ஏரல் அருகே வாக்காளர்களுக்கு சிக்கன் பிரியாணி

ஏரல் அருகே
ஏரல், அக்.18&
ஏரல் அருகே உள்ள மொட்டத்தாதன்விளையைச்சேர்ந்த தேன்ராஜ் மகன் ராஜகோபால். இவர் சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இவர் வாக்காளர்களை கவர்வதற்காக சிக்கன் பிரியாணி வழங்க ஏற்பாடு செய்தார்.
இதையொட்டி நேற்று ஓட்டு பதிவின்போது சிறுத்தொண்டநல்லூர் கிழக்குத்தெருவைச்சேர்ந்த சிந்தாசேக்முகைதீன்(51), வடக்குத்தெரு பக்ருதீன்(64) ஆகிய இருவர் வேட் பாளர் சார்பில் சிக்கன் பிரியாணி தயார் செய்து அங்குள்ள ஓட்டல் அருகே வாக்காளர்களுக்கு விநியோகித்தார்களாம். அவர்கள் இருவரையும் ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன் கைது செய்தார். இதற்கு ஏற்பாடு செய்த வேட் பாளர் ராஜ கோபாலை தேடிவருகிறார்கள்.
2 பேர் கைது

வெள்ளி, 14 அக்டோபர், 2011

ஏரல் மரக்கடையில் தீ

ஏரல் மரக்கடையில் தீ


பைக், சைக்கிள் எரிந்து நாசம்


ஏரல், அக்.14&
ஏரல் திருவள்ளுவர் சாலை தொண்டமான் தெருவைச்சேர்ந்தவர் தியாகராஜன்(48). இவர் சிறுத்தொண்டநல்லூர் செல்லும் வாய்க்கால் பாலம் அருகே மரக்கடை வைத்துள்ளார். இது பரந்த இடம் என்பதால் தெரிந்தவர்கள் இரவில் பைக் மற்றும் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று மரக்கடை தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து திருவைகுண்டம் தீயணைப்பு நிலைய அதிகாரி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த 2 மொபட், ஒரு பைக், பள்ளிக்குழந்தைகளின் 4 சைக்கிள் மற்றும் மரச்சாமான்கள் எரிந்து நாசமாகிவிட்டன. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சமாகும். தீ எப்படி பிடித்தது என்பது குறித்து ஏரல் சப்&இன்ஸ்பெக்டர் பால்ஐசக் விசாரித்து வருகிறார்.

செவ்வாய், 11 அக்டோபர், 2011

ஏரலில் உரக் கடத்தல் கும்பல் கைது

ஏரல் : தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் உரங்களை திருட்டுத்தனமாக கடத்தி ஏரல் அருகே விற்பனைசெய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். இது சம்பந்தமாக உரக்கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்த கண்ணணை போலீசார் தேடி வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் பொட்டாஷ் உரங்களை திருட்டுத்தனமாக லாரிகளில் கடத்தி கொண்டுவந்து இந்தியாவில் தயாரிக்கப்படும் உரங்களை போல உரப்பையில் தயார் செய்து உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. இதில் பெரிய கும்பல் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளது.இந்நிலையில் ஏரல் அருகேயுள்ள சூளைவாய்க்கால் காட்டுப்பகுதியில் இந்த உரங்கள் பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஏரல் இன்ஸ்பெக்டர் ராமராஜன் சப்-இன்ஸ்பெக்டர் பால்ஐசக் மற்றும் போலீசார் காட்டுப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு திருட்டுத்தனமாக கடத்திவைக்கப்பட்ட உரங்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடுத்தப்படும் லாரி மற்றும் வேனை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரை பார்த்ததும் திருட்டுக்கும்பல் சிதறிஓடியது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த முருகன், ஆத்துரை சேர்ந்த ரத்தினராஜ், மதுரையை சேர்ந்த சரவணன் ஆகிய மூன்று பேரும் போலீசாரின் பிடியில் சிக்கினர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நீண்டகாலமாக இந்த வேலை நடப்பதாகவும் இதில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை குறித்தும் போலீசாரிடம் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் போலீசார் நடத்திய அதிரடி விசாணையில் மேலும் இது சம்பந்தமாக பெருங்குளத்தை சேர்ந்த வேல்முருகன் இசக்கி,வெள்ளத்துரை மற்றொரு இசக்கி மற்றும் சுப்பையா ஆகியோர் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடத்தியதில் இது பெரிய திருட்டு தொழிலாக செய்து வந்தது போலீஸ் தரப்பில் தெரியவந்தது. இந்த கடத்தல் மற்றும் திருட்டு தொழிலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த கண்ணன் தப்பி ஓடிவிட்டார். மேலும் இவர்களை சேர்ந்து போலீசார் தேடி வருகின்றனர். தப்பி ஓடிய கண்ணன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டால் இது குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் வெளிநாடுகளில் இறக்குமதிசெய்யப்படும் பொருட்கள் இது போன்று கடத்தி விற்பனை செய்யப்படுவதாகவும். இதில் தூத்துக்குடியை சேர்ந்த பல முக்கிய புள்ளிகள் சம்பந்தபட்டுள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். இது சம்பந்தபட்ட குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திங்கள், 10 அக்டோபர், 2011

ஏரல் பேரூராட்சி பகுதியில் ஜெயதுரை எம்.பி. வாக்குசேகரிப்பு

ஏரல் பேரூராட்சி பகுதியில் ஜெயதுரை எம்.பி. வாக்குசேகரிப்பு ஏரல், அக்.10: ஏரல் பேரூ ராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் பாலகிருஷ் ணன் மற்றும் வார்டு கவுன்சிலர் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஜெயதுரை எம்.பி. வாக்கு சேகரித்தார். ஏரல் சவுக்கை அம்மன் கோவில் தெரு, பரதர் வடக்கு தெரு, பரதர் நடுத்தெரு, நாடார் தெரு, நாடார் முடுக்குத்தெரு, ஓடக்கரை தெரு, ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய கேட்டுக் கொண்டார். நகர செயலாளர் பார்த்திபன், இளைஞரணி செயலாளர் ஜோதிராஜ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் எட்வர்ட், முன்னாள் செயலாளர் பச்சைப்பெருமாள், முன்னாள் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் காளிதாஸ் பண்ணையார் மற்றும் மணிவண்ணன், சுடலை, செந்தில் ஆறுமுகம், செந்தில்குமார், வேல்முருகன், செல்வகுகன், ராஜாங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏரல் பேரூராட்சி திமுக வேட்பாளர் பாலகிருஷ்ணனை ஆதரித்து ஜெயதுரை எம்பி, வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

சனி, 8 அக்டோபர், 2011

துபாய் மாநாட்டில் ஈடிஏ அஸ்கான் எம்.டி.க்கு உலகத் தமிழர் மாமணி விருது

துபாய்: துபாயில் நடந்த 2வது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குனருக்கு உலகத் தமிழர் மாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

துபாயில் 2வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு கடந்த 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை உலக வர்த்தக மைய கன்வென்ஷன் அரங்கில் நடந்தது.

நிறைவு விழாவன்று சென்னை வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத் வரவேற்புரை நிகழ்த்தினார்

நிறைவு விழாவில் துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் சையது எம். ஸலாஹுத்தீன், மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சாமிவேலு, தோஹா வங்கி தலைமை நிர்வாக அதிகாரி சீதாராமன், மொரீஷியஸ் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன், அமெரிக்க டாக்டர் பி. ஆதிநாராயணன், ஆஸ்திரேலிய டாக்டர் பால் மொமினிக், மாஸ்கோ பாஸ்கரன், குவைத் ராஜா, சிங்கப்பூர் திருநல் கரசு பழனியப்பன் உள்ளிட்டோருக்கு ‘உலகத் தமிழர் மாமணி’ விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அப்துல் அலி மற்றும் இந்திய பணியாளர் நலம் மற்றும் ஓய்வூதிய நல இணையமைச்சர் வி. நாராயணசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

நெல்லைச் சீமையைச் சேர்ந்த அமீரகத்தின் அப்போலோ குழும தொழில் அதிபர் ஜமால் மீரான் சமீபத்தில் மரணமடைந்தார். அன்னாரின் உருவப்படத்தினை அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நிறைவுப் பேருரை நிகழ்த்திய நாராயணசாமி கூறியதாவது,

இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி அபரிமிதமானது. உலகப் பொருளாதாரத்தில் சீனாவுக்கு ( 11 % ) அடுத்தபடியாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 % என்ற அளவில் இருந்து வருகிறது. உணவுக்காக வெளிநாட்டினை எதிர்பார்த்திருந்த காலம் போய் இன்று இந்தியத் திருநாட்டிலேயே அனைத்து உணவுப் பொருட்களும், விலை பொருட்களும் கிடைக்கின்றன. இவற்றை வைப்பதற்கு தானிய வைப்பறை தான் போதிய அளவு இல்லை.

20.10.2011 அன்று வெளியான தானிய உற்பத்தி அறிக்கையிலிருந்து 234 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. இவற்றினை இந்தியாவின் 65 சதவீத மக்களுக்கு இலவசமாகவே வழங்கலாம். 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வாங்குவது அரிதாக இருந்த காலம் போய் இன்று அனைத்து வித வாகனங்களும் இந்தியாவிலும், தமிழகத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் தொகையில் 50 சதவீதம் உள்ளனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை 20 முதல் 35 வயதுடையோர் 65 சதவீதம் உள்ளனர். இதுவும் நமது பொருளாதார வளர்ச்சிக்கு மற்றுமோர் முக்கியக் காரணம். மேலும் உற்பத்தி திறன் அதிகரித்திருப்பது போன்று மக்களின் வாங்கும் சக்தியும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சுற்றுலாத்துறை மிகப்பெரும் வளர்ச்சியினை எட்டியுள்ளது. இந்தியாவிற்குள்ளே ஒவ்வொரு மாநிலத்தவரும் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டி வருவது ஆரோக்கியமான விஷயமாகும்.

உலக அளவில் பொருளாதார ஸ்திரத்தன்மை அதிகரித்த போதும் இந்தியாவின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிப்படையவில்லை. மருத்துவத் துறையிலும் இந்தியாவை தேடி வருவோர் ஏராளம். இந்தியத் திருநாட்டில் வாய்ப்புகள் அதிகம். அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.

ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அப்துல் அலி அவர்கள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்திப் பேசினார். அவர் பேசியதாவது,

எங்கள் முன்னோர்கள் தென்னிந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டனர். அப்போது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு நிலங்களைத் தானமாகக் கொடுத்தனர். திருக்குர்ஆன் கூறியபடி அவர்கள் மதம் அவர்களுக்கு எனும் வாக்கிற்கேற்ப ஒவ்வொருவரும் பிற சமயத்தாரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்குலகினர் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்ற தவறான கருத்தினைக் கொண்டுள்ளனர். இந்நிலை மாறவேண்டும். தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ளன். அவற்றைப் பயன்படுத்தி உலக அரங்கில் நாம் முன்னிலை பெற முடியும்.

ஒரு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் இளைஞர்களை தவறான வழிக்கு பயன்படுத்துகின்றன. இவை தடுக்கப்பட வேண்டும் என்றார்.

தங்கவேல் நன்றியுரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் தமிழக வர்த்தகப் பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

திங்கள், 3 அக்டோபர், 2011

விமான நேரம் மாற்றம்

விமான நேரம் மாற்றம்
தற்போது சென்னை&தூத்துக்குடி இடையே சென்று வரும் விமான சேவையின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய அட்டவணைப்படி செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு 3.50 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்து சேருகிறது. பின்னர் மாலை 4.15 மணிக்கு தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது. மற்ற நாட்களில் மதியம் 2.50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு தூத்துக்குடி வந்து சேருகிறது. தூத்துக்குடியிலிருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு மாலை 6.25 மணிக்கு சென்னை செல்கிறது. இந்த பயண நேரம் அக்டோபர் 15ம் தேதிக்கு பிறகு மாற்றப்படலாம் என தெரிவித்துள்ள

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு மேலும் ஒரு விமானம்

தூத்துக்குடி, அக்.3&
சென்னை&தூத்துக்குடி இடையே அடுத்த மாதம் முதல் கூடுதல் விமான சேவையை தனியார் நிறுவனம் துவங்கவுள்ளது. இந்த சேவை நவ. 13 லிருந்து தொடங்கும்.
தற்போது சென்னை&தூத்துக்குடி இடையே கிங் பிஷர் விமான சேவை நடைபெற்று வருகிறது. தினசரி ஒரு முறை மட்டுமே இந்த சேவை நடைபெறுவதால் பெரும்பாலான பயணிகள் மதுரை சென்று விமானத்தை பயன்படுத்தும் நிலை தொடர்ந்து வருகிறது.
இதனால் தற்போது தனியார் நிறுவனம் ஒன்று சென்னை&தூத்துக்குடி இடையே தினசரி காலை, மாலை ஆகிய இருமுறையும் விமான சேவை தொடங்க இந்திய விமான போக்குவரத்து ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது. இந்த சேவை நவ. 13ம் தேதி முதல் துவங்கப்படுகிறது. இதன் மூலம் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்திலிருந்து மதுரை சென்று விமானத்தை பயன்படுத்தும் பயணிகள் இனி தூத்துக்குடியில் இருந்தே தங்களுக்கு வசதியான நேரத்தில் விமான பயணத்தை மேற்கொள்ளலாம் என்பதால் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் இந்த சேவையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையே தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணியை விமான போக்குவரத்து ஆணையம் விரைந்து நிறைவு செய்தால் இரவு நேரத்திலும், பெரிய ரக விமானங்களும் வந்து செல்லும் வாய்ப்பு உள்ளது.

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

துபாயில் 2ம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு- தொடங்கி வைத்தார் வீரப்ப மொய்லி

துபாய்: துபாயில் இரணடாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு அக்டோபர் 1ம் தேதியான நேற்று தொடங்கியது. 4 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது. மாநாட்டை மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

தமிழர்கள் வணிகத்தில் ஒன்றுபட வேண்டும்-டத்தோ சாமிவேலு

02.10.2011 ஞாயிற்றுக்கிழமை காலை துவக்க விழா நடைபெற்றது. மலேசிய அரசின் தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் டத்தோ ஸ்ரீ சாமிவேலு தலைமை தாங்கினார். அவர் தனது தலைமையுரையில் உலகெங்கிலும் வாழ்ந்து வரும் தமிழர்கள் வணிகத்துறையில் ஒன்றுபட்டு பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் என்றார். மேலும் அமீரகத்தில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் 30 இந்திய தொழிலதிபர்கள் பெரும் பணக்காரர்களாக இருந்து வருவது பெருமையளிக்கிறது என்றார்.

மாநாட்டு அமைப்புக் குழுத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்தியாவே உலகின் எதிர்காலம்-வீரப்ப மொய்லி

இரண்டாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டினை துவக்கி வைத்து தொடக்கவுரை நிகழ்த்திய இந்திய கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தனது உரையில் இந்தியாவே உலகின் எதிர்காலம் எனக் குறிப்பிட்டார். இம்மாநாடு ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் எனத் தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், இந்தியாவில் எல்லாவித உலகத்தர வசதிகளும் உள்ளன. அமீரகம் மிகச் சிறப்பான நாடு. அமீரக ஆட்சியாளர்களின் தூர நோக்குப் பார்வை போற்றத்தக்கது.

விரைவில் புதிய பொருளாதாரக் கொள்கை மத்திய அமைச்சரவையின் அனுமதிக்குப் பிறகு வெளியிடப்பட இருக்கிறது. இது ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி உலக வன்முறை எதிர்ப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

முடியாதது என்று எதுவும் இல்லை. எதையும் சாதித்துக் காட்டவேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்வோம் என்றார்.

வாழ்த்துரை வழங்கிய ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தனது உரையில் தமிழ் மூதாட்டி ஒளவையார் பாடியதொற்கொப்பா திரைகடலோடியும் திரவியம் தேடு எனக் குறிப்பிட்டதிற்கிணங்க நாங்கள் இங்கு வந்து வணிகம் புரிகிறோம். மேலும் திருக்குர்ஆன் வசனங்களை மேற்கோள்காட்டியும் வணிகம் குறித்த தகவலை விவரித்தார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் தனது வாழ்த்துரையில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் அமீரகத்தில் வணிகம் புரிவதற்கு பெரிதும் ஒத்துழைப்பு அளித்து வரும் அமீரக ஆட்சியாளர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

மாநாடு சிறப்புற பெரிதும் ஒத்துழைப்பினை நல்கி வரும் அமீரகத் தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் சையது எம். ஸலாஹுத்தீன் காக்காவைப் பாராட்டினார்.

அமீரகத்துக்கான இந்தியத்தூதர் எம்.கே. லோகேஷ், இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா, நீதியரசர் ஏ. ஆர். இலட்சுமணன், மலேசிய துணைத்தூதர் அகமது படில் சம்சுதீன், கத்தார் தோஹா வங்கி தலைமை நிருவாக அதிகாரி ஆர். சீத்தாராமன், இந்தியா கிளப் தலைவர் சித்தார்த் பாலச்சந்திரன், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி, ராஜ்யசபா உறுப்பினர் ஜின்னா, தொழிலதிபர் வீரமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.