ஏரல் பாலத்தில் 2 நாளுக்குப்பின் போக்குவரத்து தொடங்கியது
ஏரல், நவ.29&
தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஏரல் ஆற்றுப்பாலம் கடந்த 27ஆம் தேதி மூழ்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் பாலத்தில் உள்ள தூண்களை சுற்றி அமலைச்செடிகள் மலைபோல் குவிந்து கிடந்தது. இது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால் நேற்று வெள்ளத்தையும் பொருட்படுத்தாது பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் பாலத்தில் இறங்கி அமலைச்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது தூத்துக்குடி கலெக்டர் ஆஷிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். பேரூராட்சி தலைவரை கலெக்டர் பாராட்டியதோடு அங்குள்ள அமலைச்செடிகளை அகற்றும்படி பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 40 பேர் வரைவழைக்கப்பட்டு அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அது முடியாதநிலை ஏற்பட்டதால் ஜேசிபி வரவழைக்கப்பட்டது. அதுமூலம் அகற்றும்பணி தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது. மேலும் பாலத்தின் மீது ஓடிய வெள்ளம் நேற்றிரவு வடிந்ததல், 2 நாட்களுக்குப் பின் இன்று காலை போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
இதற்கிடையில் பாலத்தின் ஆரம்ப பகுதியில் பெரிய ஓட்டை விழுந்துள்ளது. அதன்மீது முள்செடியை வெட்டிபோட்டு தற்காலிகமாக அடைத்துள்ளனர். வாகனங்கள் தட்டுத்தடுமாறித்தான் செல்கின்றன. மீண்டும் வெள்ளம் வந்தால் பாலம் இடிந்துவிடும் ஆபத்து உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக