Live Free Sun TV Online

புதன், 14 நவம்பர், 2012

ஏரல் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி அறவே இல்லை


ஏரல் பஸ்நிலையத்தில் ரோடுகள் குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாக கிடக்கிறது. இதனால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஏரல் பஸ் நிலையத்தில்
அடிப்படை வசதி அறவே இல்லை
ஏரல், நவ. 15:
ஏரல் பஸ் நிலையம் அடிப்படை வசதிகள் அறவே இன்றி, நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
து�த்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்குவது ஏரல் பேரூராட்சி. வியாபாரம், தொழில் நிமித்தம் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் ஏரல் வந்து செல்கின்றனர். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி, ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாட சுவாமி, குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் என எண்ணற்ற புகழ்பெற்ற ஆன்மீக தலங்களும் பக்தர்களின் வருகையை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.
அருகில் வனதிருப்பதி, நவதிருப்பதி கோயில்கள் மற்றும் நாலுமாவடி தேவாலயங்கள் போன்றவற்றிற்கு மாதம் தோறும் நூற்றுக்கணக்கில் விழாக்கால சிறப்பு பஸ்கள் ஏரல் வழியாக இயக்கப்படுகின்றன.
ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் 400க்கும் மேற்பட்ட தடவை வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் கூட்டத்துக்கு பஞ்சமே இல்லாத இடமாக பஸ் நிலையம் உள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது வணிக நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே உள்ளது. மழை, வெயில் எதுவானாலும் பயணிகள் ஒதுங்குவதற்கு நிழற்கூரை கூட முழுமையாக இல்லை. அற்பசொற்பமாக பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கடைகளாக மாறிவிட்டன. பஸ்கள் நிற்கிறதோ இல்லையோ வாடகை கார்கள் அணிவகுத்து நிற்பதை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
மெயின்ரோட்டை விட பஸ்நிலைய உட்புறம் பள்ளமாக இருப்பதால் சிறுமழை வந்தால் கூட தெப்பக்குளமாக மாறிவிடுகிறது. பஸ் நிலைய சிமெண்ட் சாலைகள் எல்லாமல் பெயர்ந்து பாதாள குழிகளாக மாறி விட்டன. சாலையில் பெயர்ந்த கான்கிரீட் கம்பிகள் பயணிகளின் கால்களை அவ்வப்போது பதம் பார்க்கின்றன. குடிநீர் வசதி, இலவச கழிப்பிடம், கட்டண கழிப்பிடம் என அவசர தேவை எதுவுமே இங்கு கிடையாது.
இதனாலோ என்னவோ பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக்கட்டணமே வசூலிப்பதில்லை. அப்படி வசூலித்தால் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பது தெரிந்தும் பேரூராட்சி நிர்வாகம் மவுனம் காப்பது புரியாத புதிராக உள்ளது. வருமானத்திற்கு வழிசெய்தால் பஸ் நிலைய பராமரிப்புக்கும், மேம்பாட்டுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு புகார்கள் பறந்தும் நடவடிக்கை என்பது கானல் நீராகவே உள்ளது.
ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, �ஏரல் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மகாத்மாகாந்தி பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் பஸ்நிலையத்திற்குள் நிறுத்த அனுமதி இல்லை என விளம்பர போர்டுகள் வைத்துள்ளோம்.
மீறி நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பஸ் நிலையத்தை நவீனப்படுத்தவும், இங்குள்ள வணிகவளாகத்தை புதுப்பித்து கட்டவும், பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டவும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் விரைவில் ஏற்படுத்தும் வேலைகளை துரிதப்படுத்தி வருகிறோம்� என்றார்.
வணிக நகரம் வளர்ச்சியை இழக்கிறது
ஏரல் பஸ்நிலையத்தில் உள்ள சிமென்ட் ரோடு பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.

ஏரல் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி அறவே இல்லை

திங்கள், 1 அக்டோபர், 2012

தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து சென்ற 25 லாரிகள் சிறைபிடிப்பு முக்காணியில் பரபரப்பு

ஏரல், : ஏரல் அருகே முக்காணி-ஆத்தூர் ஆற்றுப்பாலம் வழியாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்ற 25 லாரி களை பாமகவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் என்ற பெயரில் லாரிகளில் தண் ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் நிலத் தடி நீர் குறைந்து விவசாயம் அழிந்து வருவதோடு, பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. 
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் லாரிகளை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களும், சமூக அமைப்புகளும் தண்ணீர் எடுக்கும் லாரி களை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் எந்த இடத்திலும் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகளில் கொண்டு செல்லக்கூடாது என கூறி நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை முக்காணி ரவுண் டானா அருகில் தூத்துக் குடி தெற்கு மாவட்ட பாமக சார்பில் முக்காணி- ஆத்தூர் ஆற்றுப்பாலம் வழியாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்ற லாரிகளை  சிறைபிடித்தனர்.  
தெற்கு மாவட்ட செய லாளர் உமரிநெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சர வணன் முன்னிலை வகித் தார். மாநில துணை பொதுச்செயலாளர் உச்சல்சிங், மத்திய மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், மத்திய மாவட்ட செய லாளர் கிறிஸ்டி, மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் அரிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் வீரபாண்டியன், ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் செட்டி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
அப்பகுதி வழியாக சென்ற 25க்கும் மேற்ப்பட்ட லாரிகளை சிறைபிடித்ததால் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்ததும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ஆறுமுகநேரி இன்ஸ்பெக் டர் பார்த்திபன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
நாளை (இன்று) ஸ்ரீவை தாசில்தாரிடம் இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தை கைவிடமாறும் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். லாரி களும் விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவைகுண்டம், : முகம்மது நபியை அவதூறாக சித்தரித்து திரைப்படம் எடுத்ததாக கூறி அமெரிக்காவை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் உஸ்மான், பாதுஷா, அப்துல்காதர், கபீர்,அஸ்ரப்அலி மற்றும் ஸ்ரீவைகுண்டம்,பேட்மாநகரம்,ஏரல்,சிறுத்தொண்டநல்லூர்,சூளைவாய்கால்,கேம்பலாபாத்,ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், ஆராம்பண்ணை, கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஜமாத்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

பேட்மா நகரத்தில் மழைக்காக சிறப்பு தொழுகை

ஸ்ரீவைகுண்டம் : : பேட் மாநகரத்தில் மழைக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், குடிதண்ணீர் தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்ற நோக்கில் பேட்மாநகரம் பகுதி மக்கள் முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைமை இமாம் ஹாஜி அப்துல் ஆமிது ஆலிம் தலைமையில் ஒரு நாள் நோன்பு இருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைவர் ஹாஜி பீர் முகம்மது, துணைத்தலைவர் சிராஜ்தீன், நூருல் ஈமான் கல்வி அறக்ககட்டளை நிர்வாகி சித்திக் ஆலிம்,ஆசிரியர்கள் அகமது கபிர் ஆலிம், அப்துல் காதர் ஆலிம், லியாகத் ஆலிம், ஸ்ரீ மூலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் நட்டார், துணைத்தலைவர் அஷ்ரப் அலி ஆலிம், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பேட்மா நகரம் கிளை செயல் வீரர்கள் உள்பட ஐநூருக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

ஏரல் காந்தி சிலை அருகே முஸ்லிம்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்


முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஏரல், செப். 25:
நபிகள் நாயகத்தை கேலி செய்து அமெரிக்காவில் வெளியிட்ட திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஏரல் காந்தி சிலை அருகே முஸ்லிம்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரல் வடக்குப்பள்ளி ஜமாத்தலைவர் சஹாப்தின் தலைமை வகித்தார். சிறுத்தொண்டநல்லூர் ஜமாத் தலைவர் ஜெய்நூல் அசின், புதுமனை ஜமாத் தலைவர் அப்து�ல்சலாம், ஏரல் பெரிய பள்ளி நிர்வாகி பாக்கர் அலி முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில பேச்சாளர் பிர்தொசி, மாவட்ட தலைவர் ஆசாத் ஆகியோர் பேசினர். ஏரல் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவை குண்டம் டி.எஸ்.பி மணி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

சனி, 22 செப்டம்பர், 2012

காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஆறுமுகநேரி, செப். 22:
நபிகள் நாயகத்தை கேலி செய்து அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி காயல்பட்டினம் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சீதக்காதி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் வாவு நாசர், மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன், மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதுல் அஷ்ஹப், தமுமுக நகர தலைவர் ஜாகீர் உசேன், நகர துணைத்தலைவர் முர்ஷித், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நகர தலைவர் சம் சுதீன், நகர துணைத்தலை வர் சாலப்பா, காக்கும் கரங் கள் நிறுவன தலைவர் ஜெய்னுலாப்தீன், அல் அமீன் நற் பணி மன்ற தலைவர் சாகுல் ஹமீது, அல் ஜாமிவுல் அஷ்ஹர் ஜிம் ஆ பள்ளி புகாரி, இப்ராஹிம், மொக தூம் பள்ளி இப்ராஹிம், புதுப்பள்ளி சதக்கத்துல்லா மற்றும் பொது நல அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர் கள், அனைத்து ஜமாத்தை என ஏராளமான முஸ்லிம் கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திரைபடத்தை தடை செய்யவும், அமெரிக்காவை கண்டித் தும், சம்பந்தப்பட்டவர்கள் மீதுநடவடிக்கை ஐ நா சபை வலியுறுத்தவும் கோஷங்கள் எழுப்பபட்டன.
ஆர்ப்பாட்டத்தையொட்டி திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், தில்லை நாக ராஜன், தங்கராஜ் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நபிகள் நாயகத்தை கேலி செய்து எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை தடை செய்யக்கோரி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேஸ் இணைப்பு பெற்று ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்


தூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்று ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 59 ஆயிரத்து 47 ரேஷன்கார்டுகள் புழக்கத் தில் உள்ளன.
இதில் 3 லட் சத்து 83 ஆயிரத்து 951 கார்டுதாரர்கள் மண்எண்ணெய் பெற்று வருகின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 70 சதவீதம் மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்கிறது.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன. இதனை களையும் வகையில் ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 2 சிலிண்டர் உடனடியாக வழங்குவதன் மூலம் மண்ணெண்ணெய் தேவை யின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 322 பேர் ஒரு கேஸ் சிலிண்டரும், 75 ஆயி ரத்து 96 பேர் 2 சிலிண்டர்களும் என மொத்தம் 2 லட் சத்து 20 ஆயிரத்து 418 பேர் சிலிண்டர்கள் வைத்துள்ளனர். ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பித்தால் விரைவில் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
எனவே 2&வது சிலிண் டர் பெற சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு விண்ணப்பம் அளிக்கலாம்.
இதில் ஏதே னும் சிரமம் ஏற்பட்டால் தூத்துக்குடி மாவட்ட வழங் கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் 0461&2341471, தனி தாசில் தார் 94450 00371, ஸ்ரீவை குண்டம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00372, திருச்செந்தூர் வட்ட வழங் கல் அலுவலர் 94450 00373, சாத்தான்குளம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00374, கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் 94450 00375, ஓட்டப்பிடாரம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00376, விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00377, எட்டயபுரம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00378 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ள லாம். மேலும் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் இணைப்பு வைத்திருப்போர்
2வது சிலிண்டருக்கு விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் தகவல்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?


Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

FRIDAY, 17 AUGUST 2012

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல்மருத்துவம்உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ் என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில்தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள்இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டைசாதி சான்றிதழ், 10th (or)  12th  மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று 
click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர்ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID  கொடுக்கவும்பின்பு அப்பா பெயர்பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.

குறிப்பு 1 :  Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

குறிப்பு 2 :  மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

குறிப்பு 3 :  ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home  பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

குறிப்பு 4 :  Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.

Register Number :              ARD2012M00007502

வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்:  ARD  - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம்அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு  : 2012
ஆண் / பெண்           M
பதிவு எண்              7502

பதிவு எண் என்பது இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும்அப்படி இல்லாமல்இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.

User ID :  ARD2012M00007502
Password : dd / mm / yyyy

கடவு சொல்லில் உங்களது பிறந்த தேதியை கொடுக்கவும்.
உங்களது ID CARD இப்படிதான் இருக்கும்.. 
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..

வியாழன், 16 ஆகஸ்ட், 2012

ஏரலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

ஏரல், : ஏரலில் மனித உரிமைகள் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலை வர் வக்கீல் கார்த்திகேயன் தலைமை    வகித்தார். சிறுத்தொண்டநல்லூர் பஞ்சாயத்து தலைவர் தசரத பாண்டியன், ஏரல் பேரூ ராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மணிவண்ணன், வியாபாரிகள் சங்க துணைத்தலைவர் தாணுலிங்கபிள்ளை முன்னிலை வகித்தனர்.  மனித உரிமை கள் கழக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் வரவேற்றார். 
ஏரல் வியாபாரிகள் சங்கம் செயலாளர் தர்மராஜ், பொருளாளர் வில்சன் வெள்ளையா, நகர காங்கிரஸ் தலைவர் பாக்கர்அலி, ஒய்வுபெற்ற ஆசிரியர் சங்கர பொன்னம்பலம் பேசினர். 
ஏரலில் இருந்து முக் காணி செல்லும் மெயின்ரோட்டில் போர்கள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்வதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  தடுத்து நிறுத்த  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள் ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சாதிக்குல் அமீன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மேற்கு மாவட்ட மனித உரிமைகள் கழகம் தலைவர் அமர்சிங் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சனி, 28 ஜூலை, 2012

வருமான வரி கணக்கை இணையத்தில் தாக்கல் செய்வது எப்படி?

ஜூலை இறுதி என்றாலே "சீக்கிரம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்" என்கிற விழிப்பு அனைவரிடமும் இருக்கும்.  அதற்கென இருக்கும் படிவத்தை முழுதும் நிரப்புவது பெரும்பாடு தான்!!
              
இணையத்தை நாம் பல செயல்களுக்குப் பல வழிகளில் பயன்படுத்துகிறோம். இணையத்தில் மூலம் நமது வருமான வரிக் கணக்கை எப்படி தாக்கல் செய்வது (Efiling of income tax returns) என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 




வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய இணைப்பு:https://incometaxindiaefiling.gov.in/

1. முதலில் தளத்திற்குச் சென்று உங்களுக்கு என்று ஒரு கணக்கு உருவாக்கிக் கொள்ளுங்கள்.

கணக்கை எப்படி உருவாக்குவது?


  • தளத்தில் வலது பக்கத்தில் இருக்கும் Login என்கிற பகுதியில் இருக்கும் Register என்பதைச் சொடுக்குங்கள்.
  • அடுத்து வரும் பக்கத்தில், உங்களது PAN எண்ணை இடுங்கள் (உங்களது PAN எண் தான் உங்களின் கணக்கு! (user id) )
  • அடுத்து வரும் பக்கத்தில், உங்கள் விவரங்களை உள்ளிடுங்கள்.உங்கள் PAN CARD விண்ணப்பப்படிவத்தில் கொடுத்தது போலத் தான் உங்கள் பெயர் இருக்க வேண்டும். கூடவே, மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
  • உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், அதனையும் பதிவு செய்யவும் (pfx file/ USB token) 
  • செய்து முடித்த பின், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வரும். அதில் சென்று இணைப்பைச் சொடுக்கவும்.
  • உங்கள் கணக்கு தயார்!!
2. வருமான வரி தாக்கல் படிவத்தைத் தரவிறக்குங்கள் 

  •  உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
  • மேலே உள்ள Downloads --> AY 2012-13 என்பதில் செல்லுங்கள்
  • தகுந்த படிவத்தைத் தரவிறக்கிக் கொள்ளுங்கள் (Excel Utility) . அருகில் இருக்கும் உதவிக் கோப்பையும் (Help Manual) ஐயும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்! 
 குறிப்பு: நீங்கள் செய்யப்போவது  தனிநபர் தாக்கல் (Individual) என்றால், மேலே கூறியதைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கீழே இருக்கும் இணைப்பைச் சொடுக்கி அவற்றைத் தரவிறக்கலாம்.
 3. விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள்.

இந்த Spread Sheet (Excel) படிவத்தில்Macro கள் மூலம் பல செயல்கள் நடப்பதால், Macro களைச் செயல்பாட்டில் (Enable Macro) வைக்கவும்.

  •  படிவத்தில் உள்ள தொடர்புடைய பச்சை நிறக்கட்டங்களை மட்டும் நிரப்பவும்.
  • ஒவ்வொரு பக்கத்தையும் (Sheet) நிரப்பிய பின்னர் Validate என்பதனைச் சொடுக்கி எதுவும் விடுபட்டிருக்கிறதா என்று சரி பார்க்கவும்.
  • அதன் பின், அடுத்த பக்கம் (Sheet) செல்லவும்.
  • அனைத்தையும் உள்ளிட்ட பின்னர், முதல் பக்கம் வரவும். 
  • "Calculate Tax" என்பதனைச் சொடுக்கினால், படிவம் முழுதும் நிரப்பப்பட்டு விடும்.
  • அதன் பின், Generate XML என்பதனைச் சொடுக்கவும்
  • வரும் புதிய பக்கத்தில் "Save XML" என்பதனைச் சொடுக்கவும்
  • இப்போது உங்கள் தாக்கல் படிவத்தின் XML வடிவம் உங்கள் கணிணியில் இருக்கும்.
4. நிரப்பிய படிவத்தைத் தளத்தில் பதிவேற்றுங்கள்

  • உங்கள் கணக்கிற்குள் உள்நுழையுங்கள்
  • இடது பக்கத்தில் உள்ள "Submit Return" என்பதன் கீழே உள்ள Select Assessment Year --> AY 12-13 என்ற பக்கத்திற்குச் செல்லுங்கள்
  •  வரும் பக்கத்தில், தகுந்த படிவ எண்ணைத் தேர்வு செய்யவும்.
  • உங்களிடம் எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) இருந்தால், "Do you want to digitally Sign the file" என்பதில் Yes கொடுக்கவும். இல்லையேல், "No" கொடுக்கவும்.
  •  Digital Certificate இருப்பவர்கள் (Yes கொடுத்தவர்கள்) தொடர்புடையதைத் தேர்வு செய்யவும்.
  • அதன் பின் "Next" என்பதைச் சொடுக்கவும்
  •  வரும் பக்கத்தில், உங்கள் கணிணியில் சேமிக்கப்பட்ட XML கோப்பைப் பதிவேற்றுங்கள். 
  • தற்போது நீங்கள் உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்து விட்டீர்கள்!!
5. ஒப்புகை (Acknowledgement) பெறுங்கள் 
இருங்க.. கடமை முடிந்து விட்டது எனக் கிளம்பாதீங்க!!
  • எண்முறை சான்றிதழ் (Digital Cerificate) கொடுத்தவர்கள் ஒப்புகை படிவத்தை (Acknowledgement Form)  சேமித்து/ அச்சிட்டு வைத்துக் கொள்ளுங்கள்
  • மற்றவர்கள் வந்த ஒப்புகை படிவத்தை (ITR-V) அச்சிட்டு, கீழ்காணும் முகவரிக்கு (120 நாட்களுக்குள்) அனுப்புங்கள். [அஞ்சல்/ விரைவு அஞ்சல் (Speed Post) மட்டுமே!] 
முகவரி:
Income Tax Department – CPC,
Post Bag No - 1, Electronic City Post Office,
Bengaluru - 560100, Karnataka

அனுப்புபவர்கள் ஒப்புகைப் படிவத்தில் கையொப்பம் இட மறந்து விடாதீர்கள்!!

நீங்கள் தாக்கல் செய்த உடன் வரும் பக்கத்திலேயே, ஒப்புகைப் படிவத்தின் இணைப்பு இருக்கும். தவற விட்டவர்கள், உங்கள் கணக்கில் மேல் தத்தலில் உள்ள My Accounts--> My Returns சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.

ஒப்புகைப் படிவம் கடவுச்சொல் கொண்டு பாதுகாக்கப்பட்டது. 
கடவுச்சொல்: உங்கள் PAN எண்   பிறந்த நாள்
(இடையில் Space வராது)

என்ன நண்பர்களே, இனி எளிதாக உங்கள் வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்து விடலாம் தானே?


டிஸ்கி:
தாமதமாக பதிவிட்டமைக்கு வருந்துகிறேன். இருந்தாலும், இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால், பெருவாரியானவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில் பதிவிடுகிறேன்!!

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31!

வியாழன், 3 மே, 2012

வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கு தனி ஆணையம்

வெளிநாட்டு வாழ் இந்தியர் நலனுக்காக கேரளா போன்ற மாநிலங்களிலும், மைய அரசிலும் தனி அமைச்சரவையும், துறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளதைப் போலவே தமிழகத்திலும் ஏற்படுத்தவேண்டும் என்று வெளிநாடுவாழ் தமிழர் சங்கங்கள் மூலமாக கடந்த ஆட்சிக் காலத்திலிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. 

குறிப்பாக, குவைத் தமிழ்ச்சங்கம், தமாம் முத்தமிழ்ச்சங்கம், ரியாத் தமிழ்ச்சங்கம் போன்றவை இக்கோரிக்கையை விடுத்திருந்தன.

இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியச் செல்லும் இந்தியர்கள், குறிப்பாக, தமிழர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக வரும் செய்திகள் அண்மைக் காலங்களில் அதிகமாகி வருவதன் எதிரொலியாக தமிழக அரசு வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்காக தனி ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.

இந்த ஆணையம்

ஆணையர்
வெளிநாடு வாழ் தமிழர் மீட்பு நல ஆணையம்
சேப்பாக்கம், சென்னை -5


என்ற முகவரியில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 26 ஏப்ரல், 2012

பழங்களின் மருத்துவ குணங்கள்

1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும்

2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்

3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.

4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்

5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி


6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்

7.ஆப்பிள் பழம்
வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது

8.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்

9.திரட்சை
1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்

10.மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்

11.மாம்பழம்
மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்

12.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.

13.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.

14.செர்ரி திராட்சை
கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.


மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகாpக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.


பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சாpயான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நோpடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அhpய மருந்தாகவும் இருக்கிறது.
தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றhக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும்.
பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜPரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம்.
வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிhpல் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜPரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசாp உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தௌpவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாpக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தாpக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றhது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றhக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சாpயாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றhக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளாpல் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றhக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும்.
எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகாpப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜPரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீhpல் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜPரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிhpத்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.