ஏரல் பகுதியில் குறுமணல் தட்டுப்பாடு
நலிவடையும் செங்கல் சூளை தொழில்
ஏரல் புதுமனையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் செங்கல்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
ஏரல், ஜூன் 19:
குறுமணல் தட்டுப்பாட்டால் ஏரல் பகுதிகளில் செங்கல் சூளை தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புதுமனை, அம்மாள்தோப்பு, வாழவல்லான், ஆலடியூர், உமரிக்காடு, முக்காணி, லெட்சுமிபுரம், இரண் டாம்பண்னைவிளை, குரங்கணி, மாவடிபண்ணை, தென்திருப்பேரை, பால்குளம் ஆழ்வார்தோப்பு பகுதிகளில் செங்கல் சூளைகள் மற்றும் சேம்பர் செங்கல்கள் தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. இப்பகுதியில் 15 சேம்பர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும் உள்ளன.
இதில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் செங்கல் உற்பத்தி பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். இடையில் மழைக்காலத்தில் மூன்று மாதங்கள் தொழில் நிறுத்தி வைக்கப்படும். கடந்த ஆண்டு சேம்பர் செங்கல் ஒன்று ரூ6க்கும், சூளையில் தயாரிக்கப்படும் சாதா செங்கல் ஒன்று ரூ.5.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது செங்கல் விலை குறைந்துள்ளது. ரூ.6க்கு விற்ற சேம்பர் செங்கல் ஒன்று ரூ4.50 முதல் ரூ.5 வரை விற்பனையாகிறது. அதேபோல சாதாரண செங்கல் தற்போது ரூ3.90 முதல் 4.10 வரை விற்பனையாகிறது. செங்கல் விற்பனை குறைவாக உள்ளதால் ஒவ்வொரு சேம்பரிலும் லட்சக்கணக்கான செங்கல் இருப்பில் உள்ளன. மேலும் செங்கல் தயாரிப்புக்கு தேவையான குறுமணல் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் செங்கல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஒரு சில இடங்களில் செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு சேம்பர் நடத்தி வருபவர்கள் ஒன்றை நிறுத்திவிட்டு ஒன்றில் மட்டும் செங்கல் தயாரித்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் செங்கல் தொழில் முழு வதும் பாதிக்கப்படுவதோடு தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சேம்பர் உரிமை யாளர் ராயப்பன் கூறியதா வது:
செங்கல் தயாரிக்க குறுமண் கிடைப்பதே கடினமாக உள்ளது. குறுமணலுக்கு அதிக விலை கொடுத்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தொழிலாளர்களும் வேலைக்கு சரியாக கிடைப்பதில்லை. இருந் தாலும் இருக்கிற தொழிலாளர்களை கொண்டு செங்கல் தயாரித்து வருகிறோம். கடந்த ஆண்டைவிட செங்கல் விலை குறைந்தாலும் விற்பனை குறைவாகவே உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசு இலவச வீடுகளும், அரசு கட்டிடங்களும் அதிக அளவு கட்டப்பட்டு வந்த தால் இங்கு தயார் செய்யப்படும் செங்கல்கள் பிற மாவட்டங்களுக்கு சென்றன.
இதனால் செங்கல் விலை அதிகமாக இருந் தாலும் தட்டுப்பாடுடன் இருந்து வந்தது. ஆனால் தற்போது விலை குறைந்தாலும் விற்பனை சரிவர இல்லை.
மேலும் குறுமணல் கிடைப்பது அரிதாக உள் ளது. இதனால் சேம்பர் களை மூடுவதை தவிர வேறு வழியில்லை� என்றார்.
10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்