shahanee
வெள்ளி, 25 ஜூலை, 2014
வெள்ளி, 28 பிப்ரவரி, 2014
சனி, 2 நவம்பர், 2013
Sirappu Pattimandram Dt 02-11-13
http://www.youtube.com/v/da3z0mbi23I?autohide=1&version=3&attribution_tag=CSFqzU9S3tEI90oibeQlSQ&showinfo=1&autoplay=1&autohide=1&feature=share
வெள்ளி, 1 நவம்பர், 2013
செவ்வாய், 29 அக்டோபர், 2013
திங்கள், 28 அக்டோபர், 2013
ஞாயிறு, 27 அக்டோபர், 2013
புதன், 19 ஜூன், 2013
ஏரல் பகுதியில் குறுமணல் தட்டுப்பாடு
ஏரல் பகுதியில் குறுமணல் தட்டுப்பாடு
நலிவடையும் செங்கல் சூளை தொழில்
ஏரல் புதுமனையில் உள்ள ஒரு செங்கல் சூளையில் செங்கல்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
ஏரல், ஜூன் 19:
குறுமணல் தட்டுப்பாட்டால் ஏரல் பகுதிகளில் செங்கல் சூளை தொழில் நலிவடைந்து வருகிறது. இதனால் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான புதுமனை, அம்மாள்தோப்பு, வாழவல்லான், ஆலடியூர், உமரிக்காடு, முக்காணி, லெட்சுமிபுரம், இரண் டாம்பண்னைவிளை, குரங்கணி, மாவடிபண்ணை, தென்திருப்பேரை, பால்குளம் ஆழ்வார்தோப்பு பகுதிகளில் செங்கல் சூளைகள் மற்றும் சேம்பர் செங்கல்கள் தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. இப்பகுதியில் 15 சேம்பர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளும் உள்ளன.
இதில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். மேலும் மறைமுகமாக 25 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் செங்கல் உற்பத்தி பிப்ரவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை நடைபெறும். இடையில் மழைக்காலத்தில் மூன்று மாதங்கள் தொழில் நிறுத்தி வைக்கப்படும். கடந்த ஆண்டு சேம்பர் செங்கல் ஒன்று ரூ6க்கும், சூளையில் தயாரிக்கப்படும் சாதா செங்கல் ஒன்று ரூ.5.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது செங்கல் விலை குறைந்துள்ளது. ரூ.6க்கு விற்ற சேம்பர் செங்கல் ஒன்று ரூ4.50 முதல் ரூ.5 வரை விற்பனையாகிறது. அதேபோல சாதாரண செங்கல் தற்போது ரூ3.90 முதல் 4.10 வரை விற்பனையாகிறது. செங்கல் விற்பனை குறைவாக உள்ளதால் ஒவ்வொரு சேம்பரிலும் லட்சக்கணக்கான செங்கல் இருப்பில் உள்ளன. மேலும் செங்கல் தயாரிப்புக்கு தேவையான குறுமணல் கிடைப்பது அரிதாக உள்ளது. இதனால் செங்கல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஒரு சில இடங்களில் செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இரண்டு சேம்பர் நடத்தி வருபவர்கள் ஒன்றை நிறுத்திவிட்டு ஒன்றில் மட்டும் செங்கல் தயாரித்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர். இதேநிலை தொடர்ந்து நீடித்தால் செங்கல் தொழில் முழு வதும் பாதிக்கப்படுவதோடு தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சேம்பர் உரிமை யாளர் ராயப்பன் கூறியதா வது:
செங்கல் தயாரிக்க குறுமண் கிடைப்பதே கடினமாக உள்ளது. குறுமணலுக்கு அதிக விலை கொடுத்து இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். தொழிலாளர்களும் வேலைக்கு சரியாக கிடைப்பதில்லை. இருந் தாலும் இருக்கிற தொழிலாளர்களை கொண்டு செங்கல் தயாரித்து வருகிறோம். கடந்த ஆண்டைவிட செங்கல் விலை குறைந்தாலும் விற்பனை குறைவாகவே உள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசு இலவச வீடுகளும், அரசு கட்டிடங்களும் அதிக அளவு கட்டப்பட்டு வந்த தால் இங்கு தயார் செய்யப்படும் செங்கல்கள் பிற மாவட்டங்களுக்கு சென்றன.
இதனால் செங்கல் விலை அதிகமாக இருந் தாலும் தட்டுப்பாடுடன் இருந்து வந்தது. ஆனால் தற்போது விலை குறைந்தாலும் விற்பனை சரிவர இல்லை.
மேலும் குறுமணல் கிடைப்பது அரிதாக உள் ளது. இதனால் சேம்பர் களை மூடுவதை தவிர வேறு வழியில்லை� என்றார்.
10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்
வெள்ளி, 7 ஜூன், 2013
மாத்தூர் தொட்டி பாலம் ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம் !
மாத்தூர் தொட்டி பாலம் இது 1966 ல் காமராசர் முதல் அமைச்சராக இருந்த போது, திருவட்டார் பஞ்சாயத்தை சேர்ந்த பகுதியில் கட்டபட்டதாகும். சுற்றலா பயணிகளின் கவனத்தை கவரும் விதம் அழகாக காட்சி தரும் மாத்தூர் தொட்டி பாலம் விளவம்கோடு, கல்குளம் என்ற இரு கிராமங்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதம் ‘பறழியார்’ என்ற நதியின் மேல் கட்டப்பட்டுள்ளதாகும்.
திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம். ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன
பாலத்தின் ஊடாக நடப்பது என்பது திகில் கொண்ட பயணம் போல் இருக்கின்றது. மேலிருந்து கீழ் பக்கம் நதியை நோக்கும் போது தலைசுற்றுவது போல் தோன்றினாலும் பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் . சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர். மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயண்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு!
இப்பாலத்திற்க்கு செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து 60 கி.மீ அதே போல் கன்னியாகுமாரியில் இருந்து செல்ல 60 கி.மீ தூரமும் உண்டு. இப்பாலம் கட்ட செலவாக்க பட்ட தொகை 12 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். பயணிகளிடம் கட்டனம் ஏதுவும் வாங்கவில்லை என்பதும் பயணிகளுக்கு என நல்ல வசதி செய்து கொடுக்கப்படுவதும் கவனிக்கப் படவேண்டியதே.

புதன், 1 மே, 2013
ஏரலில் விவசாயிகள் உண்ணாவிரதம்
ஏரலில் விவசாயிகள் உண்ணாவிரதம்
ஏரல், மே. 1&
ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசன விவசாயிகளுக்கு முன்கார் சாகுபடிக்கு அனுமதி கோரி ஏரலில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஸ்ரீவைகுண்டம் வடகால் மற்றும் தென்கால் பாசன பகுதிகளில் உள்ள 21113.54 ஏக்கர்களுக்கு ஏப்ரல் 1&ம் தேதி அட்வான்ஸ் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், தற்போது பிசான சாகுபடியும் நடைபெறவில்லை. இந்த காலகட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகளில் தண்ணீர் இருந்தும் அட்வான்ஸ் கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கவில்லை.
எனவே முன்கார் சாகுபடிக்கு அனுமதி வழங்காததை கண்டித்தும், உடனடியாக அனுமதி வழங்க வலியுறுத்தியும் ஏரல் பேரூராட்சி அருகில் விவசாயிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை தலைவர் நயினார் குலசேகரன் தலைமை வகித்தார்.
சமூக ஆர்வலர் ஜெயபாலன், ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், சூழைவாய்க்கால் பஞ்சாயத்து தலைவர் அனஸ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாதிக்குல் அமீன், ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்கம் துணைத்தலைவர் தானுலிங்கம்பிள்ளை, பொருளாளர் வில்சன் வெள்ளையா, செயலாளர் தர்மராஜ், முஸ்லீம் வணிகர் சங்கம் தலைவர் பாக்கர் அலி, ஆறுமுகமங்கலம் பஞ்சாயத்து தலைவர் அரிராமன், மேல ஆத்தூர் பஞ்சாயத்து துணைத்தலைவர் அக்பர், ஏரல் பிஜேபி விவசாய அணி கருப்பசாமி, பாமக வியனரசு, ஆத்தூர் விவசாய சங்கம் மூக்காண்டி உள்பட பலர் கலந்து கொண் டனர்.
ஸ்ரீவை வடகால், தென்கால் பாசன பகுதி விவசாயிகளுக்கு முன் கார் சாகுபடி செய்ய அனுமதி வழங்க கோரி விவசாயிகள் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் நயினார் குலசேகரன் பேசினார்.
புதன், 14 நவம்பர், 2012
ஏரல் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதி அறவே இல்லை
ஏரல் பஸ்நிலையத்தில் ரோடுகள் குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாக கிடக்கிறது. இதனால் பயணிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
ஏரல் பஸ் நிலையத்தில்
அடிப்படை வசதி அறவே இல்லை
ஏரல், நவ. 15:
ஏரல் பஸ் நிலையம் அடிப்படை வசதிகள் அறவே இன்றி, நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது.
து�த்துக்குடி மாவட்டத்தில் முக்கிய வணிக நகரமாக விளங்குவது ஏரல் பேரூராட்சி. வியாபாரம், தொழில் நிமித்தம் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் ஏரல் வந்து செல்கின்றனர். ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி, ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலைமாட சுவாமி, குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில் என எண்ணற்ற புகழ்பெற்ற ஆன்மீக தலங்களும் பக்தர்களின் வருகையை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன.
அருகில் வனதிருப்பதி, நவதிருப்பதி கோயில்கள் மற்றும் நாலுமாவடி தேவாலயங்கள் போன்றவற்றிற்கு மாதம் தோறும் நூற்றுக்கணக்கில் விழாக்கால சிறப்பு பஸ்கள் ஏரல் வழியாக இயக்கப்படுகின்றன.
ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து தினசரி 40க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் 400க்கும் மேற்பட்ட தடவை வந்து செல்கின்றன. இதனால் பயணிகள் கூட்டத்துக்கு பஞ்சமே இல்லாத இடமாக பஸ் நிலையம் உள்ளது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பஸ் நிலையத்தில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது வணிக நகரின் வளர்ச்சிக்கு பெரும் தடையாகவே உள்ளது. மழை, வெயில் எதுவானாலும் பயணிகள் ஒதுங்குவதற்கு நிழற்கூரை கூட முழுமையாக இல்லை. அற்பசொற்பமாக பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் கடைகளாக மாறிவிட்டன. பஸ்கள் நிற்கிறதோ இல்லையோ வாடகை கார்கள் அணிவகுத்து நிற்பதை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
மெயின்ரோட்டை விட பஸ்நிலைய உட்புறம் பள்ளமாக இருப்பதால் சிறுமழை வந்தால் கூட தெப்பக்குளமாக மாறிவிடுகிறது. பஸ் நிலைய சிமெண்ட் சாலைகள் எல்லாமல் பெயர்ந்து பாதாள குழிகளாக மாறி விட்டன. சாலையில் பெயர்ந்த கான்கிரீட் கம்பிகள் பயணிகளின் கால்களை அவ்வப்போது பதம் பார்க்கின்றன. குடிநீர் வசதி, இலவச கழிப்பிடம், கட்டண கழிப்பிடம் என அவசர தேவை எதுவுமே இங்கு கிடையாது.
இதனாலோ என்னவோ பஸ் நிலையத்திற்கு வந்து செல்லும் பஸ்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நுழைவுக்கட்டணமே வசூலிப்பதில்லை. அப்படி வசூலித்தால் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் என்பது தெரிந்தும் பேரூராட்சி நிர்வாகம் மவுனம் காப்பது புரியாத புதிராக உள்ளது. வருமானத்திற்கு வழிசெய்தால் பஸ் நிலைய பராமரிப்புக்கும், மேம்பாட்டுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை.
இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு புகார்கள் பறந்தும் நடவடிக்கை என்பது கானல் நீராகவே உள்ளது.
ஏரல் பேரூராட்சி தலைவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, �ஏரல் தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட மகாத்மாகாந்தி பஸ் நிலையத்திற்குள் அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் பஸ்நிலையத்திற்குள் நிறுத்த அனுமதி இல்லை என விளம்பர போர்டுகள் வைத்துள்ளோம்.
மீறி நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். பஸ் நிலையத்தை நவீனப்படுத்தவும், இங்குள்ள வணிகவளாகத்தை புதுப்பித்து கட்டவும், பேரூராட்சிக்கு புதிய அலுவலகம் கட்டவும் மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை வசதிகள் விரைவில் ஏற்படுத்தும் வேலைகளை துரிதப்படுத்தி வருகிறோம்� என்றார்.
வணிக நகரம் வளர்ச்சியை இழக்கிறது
ஏரல் பஸ்நிலையத்தில் உள்ள சிமென்ட் ரோடு பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன.
திங்கள், 1 அக்டோபர், 2012
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து சென்ற 25 லாரிகள் சிறைபிடிப்பு முக்காணியில் பரபரப்பு
ஏரல், : ஏரல் அருகே முக்காணி-ஆத்தூர் ஆற்றுப்பாலம் வழியாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்ற 25 லாரி களை பாமகவினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் என்ற பெயரில் லாரிகளில் தண் ணீர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் நிலத் தடி நீர் குறைந்து விவசாயம் அழிந்து வருவதோடு, பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.
தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுக்கும் லாரிகளை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.
அதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பொதுமக்களும், சமூக அமைப்புகளும் தண்ணீர் எடுக்கும் லாரி களை சிறைபிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்டத்தில் எந்த இடத்திலும் நிலத்தடி நீரை உறிஞ்சி லாரிகளில் கொண்டு செல்லக்கூடாது என கூறி நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை முக்காணி ரவுண் டானா அருகில் தூத்துக் குடி தெற்கு மாவட்ட பாமக சார்பில் முக்காணி- ஆத்தூர் ஆற்றுப்பாலம் வழியாக தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்ற லாரிகளை சிறைபிடித்தனர்.
தெற்கு மாவட்ட செய லாளர் உமரிநெப்போலியன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சர வணன் முன்னிலை வகித் தார். மாநில துணை பொதுச்செயலாளர் உச்சல்சிங், மத்திய மாவட்ட தலைவர் மாரிச்செல்வம், மத்திய மாவட்ட செய லாளர் கிறிஸ்டி, மாநில இளைஞர் சங்க துணைச் செயலாளர் அரிச்சந்திரன், மாவட்ட துணைத்தலைவர் வீரபாண்டியன், ஸ்ரீவை ஒன்றிய செயலாளர் செட்டி மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்பகுதி வழியாக சென்ற 25க்கும் மேற்ப்பட்ட லாரிகளை சிறைபிடித்ததால் தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவல் அறிந்ததும் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், ஆறுமுகநேரி இன்ஸ்பெக் டர் பார்த்திபன் ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நாளை (இன்று) ஸ்ரீவை தாசில்தாரிடம் இப்பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்வதாகவும், போராட்டத்தை கைவிடமாறும் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். லாரி களும் விடுவிக்கப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

ஸ்ரீவைகுண்டத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவைகுண்டம், : முகம்மது நபியை அவதூறாக சித்தரித்து திரைப்படம் எடுத்ததாக கூறி அமெரிக்காவை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர் உஸ்மான், பாதுஷா, அப்துல்காதர், கபீர்,அஸ்ரப்அலி மற்றும் ஸ்ரீவைகுண்டம்,பேட்மாநகரம்,ஏரல்,சிறுத்தொண்டநல்லூர்,சூளைவாய்கால்,கேம்பலாபாத்,ஆழ்வார்திருநகரி, செய்துங்கநல்லூர், ஆராம்பண்ணை, கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஜமாத்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செவ்வாய், 25 செப்டம்பர், 2012
பேட்மா நகரத்தில் மழைக்காக சிறப்பு தொழுகை
ஸ்ரீவைகுண்டம் : : பேட் மாநகரத்தில் மழைக்காக சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும், குடிதண்ணீர் தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்ற நோக்கில் பேட்மாநகரம் பகுதி மக்கள் முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைமை இமாம் ஹாஜி அப்துல் ஆமிது ஆலிம் தலைமையில் ஒரு நாள் நோன்பு இருந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் முகைதீன் ஜாமிஆ மஜ்ஸித் தலைவர் ஹாஜி பீர் முகம்மது, துணைத்தலைவர் சிராஜ்தீன், நூருல் ஈமான் கல்வி அறக்ககட்டளை நிர்வாகி சித்திக் ஆலிம்,ஆசிரியர்கள் அகமது கபிர் ஆலிம், அப்துல் காதர் ஆலிம், லியாகத் ஆலிம், ஸ்ரீ மூலக்கரை ஊராட்சி மன்ற தலைவர் நட்டார், துணைத்தலைவர் அஷ்ரப் அலி ஆலிம், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பேட்மா நகரம் கிளை செயல் வீரர்கள் உள்பட ஐநூருக்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

ஏரல் காந்தி சிலை அருகே முஸ்லிம்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஏரல், செப். 25:
நபிகள் நாயகத்தை கேலி செய்து அமெரிக்காவில் வெளியிட்ட திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி ஏரல் காந்தி சிலை அருகே முஸ்லிம்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏரல் வடக்குப்பள்ளி ஜமாத்தலைவர் சஹாப்தின் தலைமை வகித்தார். சிறுத்தொண்டநல்லூர் ஜமாத் தலைவர் ஜெய்நூல் அசின், புதுமனை ஜமாத் தலைவர் அப்து�ல்சலாம், ஏரல் பெரிய பள்ளி நிர்வாகி பாக்கர் அலி முன்னிலை வகித்தனர். தமுமுக மாநில பேச்சாளர் பிர்தொசி, மாவட்ட தலைவர் ஆசாத் ஆகியோர் பேசினர். ஏரல் மற்றும் சுற்றுப் பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீவை குண்டம் டி.எஸ்.பி மணி உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சனி, 22 செப்டம்பர், 2012
காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஆறுமுகநேரி, செப். 22:
நபிகள் நாயகத்தை கேலி செய்து அமெரிக்காவில் வெளியிடப்பட்ட திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி காயல்பட்டினம் ஊர் பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சீதக்காதி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் வாவு நாசர், மாவட்ட செயலாளர் மஹ்மூதுல் ஹசன், மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதுல் அஷ்ஹப், தமுமுக நகர தலைவர் ஜாகீர் உசேன், நகர துணைத்தலைவர் முர்ஷித், தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் நகர தலைவர் சம் சுதீன், நகர துணைத்தலை வர் சாலப்பா, காக்கும் கரங் கள் நிறுவன தலைவர் ஜெய்னுலாப்தீன், அல் அமீன் நற் பணி மன்ற தலைவர் சாகுல் ஹமீது, அல் ஜாமிவுல் அஷ்ஹர் ஜிம் ஆ பள்ளி புகாரி, இப்ராஹிம், மொக தூம் பள்ளி இப்ராஹிம், புதுப்பள்ளி சதக்கத்துல்லா மற்றும் பொது நல அமைப்பு நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர் கள், அனைத்து ஜமாத்தை என ஏராளமான முஸ்லிம் கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் திரைபடத்தை தடை செய்யவும், அமெரிக்காவை கண்டித் தும், சம்பந்தப்பட்டவர்கள் மீதுநடவடிக்கை ஐ நா சபை வலியுறுத்தவும் கோஷங்கள் எழுப்பபட்டன.
ஆர்ப்பாட்டத்தையொட்டி திருச்செந்தூர் டிஎஸ்பி ஞானசேகரன், இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், தில்லை நாக ராஜன், தங்கராஜ் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
நபிகள் நாயகத்தை கேலி செய்து எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை தடை செய்யக்கோரி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கேஸ் இணைப்பு பெற்று ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்று ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கலெக்டர் ஆஷிஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் 4 லட்சத்து 59 ஆயிரத்து 47 ரேஷன்கார்டுகள் புழக்கத் தில் உள்ளன.
இதில் 3 லட் சத்து 83 ஆயிரத்து 951 கார்டுதாரர்கள் மண்எண்ணெய் பெற்று வருகின்றனர். மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு 70 சதவீதம் மண்எண்ணெய் ஒதுக்கீடு செய்கிறது.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மண்ணெண்ணெய் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன. இதனை களையும் வகையில் ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு 2 சிலிண்டர் உடனடியாக வழங்குவதன் மூலம் மண்ணெண்ணெய் தேவை யின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 322 பேர் ஒரு கேஸ் சிலிண்டரும், 75 ஆயி ரத்து 96 பேர் 2 சிலிண்டர்களும் என மொத்தம் 2 லட் சத்து 20 ஆயிரத்து 418 பேர் சிலிண்டர்கள் வைத்துள்ளனர். ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், 2&வது சிலிண்டர் பெற விண்ணப்பித்தால் விரைவில் வழங்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.
எனவே 2&வது சிலிண் டர் பெற சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு விண்ணப்பம் அளிக்கலாம்.
இதில் ஏதே னும் சிரமம் ஏற்பட்டால் தூத்துக்குடி மாவட்ட வழங் கல் மற்றும் நுகர்வோர் பாது காப்பு அலுவலர் 0461&2341471, தனி தாசில் தார் 94450 00371, ஸ்ரீவை குண்டம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00372, திருச்செந்தூர் வட்ட வழங் கல் அலுவலர் 94450 00373, சாத்தான்குளம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00374, கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் 94450 00375, ஓட்டப்பிடாரம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00376, விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00377, எட்டயபுரம் வட்ட வழங்கல் அலுவலர் 94450 00378 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ள லாம். மேலும் இலவச கேஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேஸ் இணைப்பு வைத்திருப்போர்
2வது சிலிண்டருக்கு விண்ணப்பிக்கலாம்
கலெக்டர் தகவல்
வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012
Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
FRIDAY, 17 AUGUST 2012
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும். ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.
இன்று நாம் புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி என்று பார்ப்போம். இதற்கு குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், 10th (or) 12th மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில் இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

click here for new user ID registration என்று இருக்கும் ( உதாரணத்திற்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்) அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்
பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி,குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்
உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detailஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Createஆகிவிடும்.
குறிப்பு 1 : Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.
குறிப்பு 2 : மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.
குறிப்பு 3 : ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home பகுதியில் Modify Contactஇருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.
குறிப்பு 4 : Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.
Renewal செய்வதற்கான குறிப்பு :
உதாரணத்திற்கு Register Number இப்படித்தான் இருக்கும்.
Register Number : ARD2012M00007502
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்: ARD - என்பது ( வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர் )
பதிவு செய்த ஆண்டு : 2012
ஆண் / பெண் : M
பதிவு எண் : 7502
பதிவு எண் என்பது 8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், அப்படி இல்லாமல்4 இலக்க எண்ணாக இருந்தால் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்.
User ID : ARD2012M00007502
Password : dd / mm / yyyy
அவ்வளவு தான் நண்பர்களே.. இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவில் ஏதேனும் தவறுகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள் திருத்தம் செய்து கொள்கிறேன்..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.jpg)

6.png)