ஏரல் பகுதி கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு
ஏரல் : ஏரல் பகுதியில் உள்ள ஸ்வீட் மற்றும் பேக்கரி கடைகளில் சுகாதார துறையினர் அதிரடி ஆய்வு செய்தனர்.தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் காதர்ஷா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கற்பகம், முருகேசன், ராமகிருஷ்ணன், பிச்சாண்டி, கணேசன், பாலம்மாள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஏரல் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் தரமற்ற, காலாவதியான பொருட்கள் விற்கப்படுகின்றதா, தயாரிக்கும் இடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது. ஸ்வீட், பேக்கரி, டீ மற்றும் உணவுப் பொருட்கள் கடைகள் உட்பட்ட 42 கடைகளில் நடந்த சோதனையில் தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இது போ ன்று தரமற்ற உணவு பொருட்களை விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக